தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அங்கு நிலவும் சூழல் குறித்து ஆய்வு செய்வதற்காக 28 எம்.பிக்கள் அடங்கிய ஐரோப்பிய யூனியன் குழு இந்தியா வந்துள்ளது. டெல்லியில், ஐரோப்பிய யூனியன் குழுவினருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய நரேந்திர மோடி, தீவிரவாதத்தை ஆதாரிக்கும் நாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக உறவாக ஐரோப்பிய யூனியன் உள்ளதாக கூறிய பிரதமர் மோடி, ஐரோப்பிய யூனியனுடனான உறவுக்கு இந்தியா முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறினார். இதனையடுத்து, கள நிலவரங்களை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய யூனியன் குழு ஜம்மு-காஷ்மீருக்கு இன்று செல்கிறது.