பாகிஸ்தானின் முதல் இந்து பெண் நீதிபதியான சுமன் குமாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 2 சதவீத மட்டுமே இந்துக்கள் உள்ள நிலையில், இந்து மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் நீதிபதியாகியுள்ளார். கடைசியாக இந்து மதத்தை சேர்ந்த ரானா பகவந்தாஸ் என்பவர், 2005 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சுமன் குமாரி, இதுபோன்ற துறைகளில் பெண்கள் முன்னேறுவது என்பது மிகவும் சாதாரணமானது அல்ல என்றும், சமூகத்தில் பின் தங்கிய மக்களின் முறையான பிரச்சனைக்காக குரல் கொடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.