கஜா புயலால் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகளில் சுமார் 8 ஆயிரம் பணியாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கஜா புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் 12 ஆயிரம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் திருச்செங்கோட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகளில் சுமார் 8ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். அரசு மருத்துவமனைகளுக்கு மின்சாரம் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இன்று இரவுக்குள் மின் இணைப்புகள் முழுமையாக சரி செய்யப்படும் எனவும் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.