திருவள்ளூர், திருமழிசை சந்தைக்கு 5,000 டன் காய்கறிகள் கொண்டு வரப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோயம்பேடு சந்தை மூடப்பட்டதை அடுத்து, திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டது. மொத்த வியாபாரிகளுக்கு 200 கடைகளுடன் இந்த சந்தை தொடங்கப்பட்டுள்ளது. இதனை சி. எம். டி. ஏ. செயலாளர் கார்த்திகேயன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்த மார்க்கெட்டில் ஒவ்வொரு கடைகளுக்கும் இடையே 20 அடி இடைவெளி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடைக்கும் தனி மின் இணைப்பு மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 4 இடங்களில் காவல்துறை பாதுகாப்பு மையமும், 2 சுகாதாரத்துறை மையமும் அமைக்கப்பட்டுள்ளது. திருமழிசை தற்காலிக காய்கறி சந்தைக்கு வாகனங்கள் மூலம் ஐந்தாயிரம் டன் காய்கறிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்து காய்கறிகள் வாங்க சென்னை புறநகரில் உள்ள சில்லறை வியாபாரிகள் திருமழிசை மார்க்கெட்டுக்கு வர தொடங்கி உள்ளனர்.

Exit mobile version