முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது தேசிய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள பேக்கரும்பு கிராமத்தில், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் தேசிய நினைவிடம் உள்ளது. அவரது எட்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி, நினைவிடம், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் குடும்பத்தினர், நினைவிடத்தில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மேலும், கலாமின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
Discussion about this post