அப்துல்கலாம் விருதை இஸ்ரோ தலைவர் சிவனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார்.
தமிழக அரசு சார்பில் ஆண்டு தோறும் சுதந்திர தினத்தன்று சிறந்த சாதனையாளர்களுக்கு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, PSLV ராக்கெட்களை திட்டமிடுதல், வடிவமைத்தல், ஆய்விலும் அளப்பரிய பங்காற்றியுள்ள இஸ்ரோ தலைவர் சிவன் தலைமையில், ஜூலையில் சந்திரயான் -2 நிலவை நோக்கி விண்ணில் செலுத்தப்பட்டது.
அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழக அரசு அப்துல் கலாம் விருதை அறிவித்தது. இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், அப்துல்கலாம் விருதினை பெற்றுக்கொண்டார். விருதினை பெற்றுக் கொண்ட சிவன் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்தார்.