கோவை மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்து இன்று முதல் பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆழியாறு பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை ஏற்று கோவை மாவட்டம், ஆழியாறு படுகையின் பொள்ளாச்சி கால்வாய் ‘அ’ மண்டலம், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் ‘ஆ’ மண்டலம், சேத்துமடைக் கால்வாய் ‘அ’ மண்டலம், ஆழியாறு ஊட்டுக் கால்வாய் ‘அ’ மண்டலம் ஆகிய பகுதிகளுக்கு இன்று முதல் ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள 22ஆயிரத்து 116 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் என்றும் அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.