100 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் ஒரு லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்!

பாலாற்றில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் காரணமாக, தொடர்ந்து கனமழை பெய்ததால், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள பாலாறு அணைக்கட்டிலிருந்து விநாடிக்கு ஒரு லட்சத்து நான்காயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

இதனால் பாலாறு வழியாக காஞ்சிபுரத்தில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது. இது செங்கல்பட்டு மாவட்டத்தை கடந்து கடலில் கலக்கிறது. 1903 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது பாலாற்றில் கடல் போல் பரந்து விரிந்து செல்லும் தண்ணீரை காண அங்குள்ள மேம்பாலத்தில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

செய்யாறு, பாலாறு உள்ளிட்ட கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், எந்த காரணம் கொண்டும் ஆற்று பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Exit mobile version