ஆவின் பால் பொருட்களின் விற்பனையை மேம்படுத்த திறனற்ற திமுக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காத நிலையில், அவற்றின் விற்பனை கடுமையாக சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆவின் நிறுவனம், பால் மட்டுமின்றி வெண்ணெய், நெய், இனிப்புகள் உள்ளிட்ட 200 வகையான உப பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இவை, ஆவின் நேரடி விற்பனை நிலையங்கள், தனியார் பாலகம், சூப்பர் மார்க்கெட், மளிகை மொத்த விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் விற்கப்படுகின்றன.
இந்நிலையில், ஆவின் பால் பொருட்களின் விற்பனையை, நிர்வாகத் திறனற்ற திமுக அரசு மேம்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதன் காரணமாக, ஆவின் பால் பொருட்களின் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, தற்போது ஆவின் பால் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு விடியா அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆவின் பொருட்களின் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில், அதன் விற்பனையை மேம்படுத்த ஆரம்ப நிலையிலேயே விடியா அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.