இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! பக்குவமற்ற பேச்சால் திமுகவை சில்லுசில்லாக உடைக்கப்போகும் உதயநிதி!

திமுகவுல இனி எல்லாம் நான் தான் என்று சட்டைக்காலரை தூக்கிவிட்டு சுற்றிக்கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலினை குனிந்து கும்பிடு போடாத முக்கியத்தலைவர்களே இல்லை எனலாம்.. அவ்வளவு ஏன்? சட்டமன்றத்திலேயே முன்வரிசையில் ஸ்டாலின் அமர்ந்திருக்க, அங்க ஒரு கும்புடு, அப்படியே ரெண்டு ஸ்டெப் மேலே ஏறி, உதயநிதிக்கு ஒரு கும்பிடு என்று கும்பிடு குருசாமிக்களாகவே மாறிப்போயிருக்கும் திமுக எம்எல்ஏக்கள் உள்ளுக்குள் செமக்கடுப்பில் இருக்கிறார்கள் என்று ஏகத்துக்கும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன…

மறைந்த கருணாநிதி காலத்தில் இருந்தே கட்சியில் பணியாற்றியவர்கள், கட்சிக்காக பாடுபட்டவர்கள் எல்லாம் அறிவாலய வாசலில் நின்றுகொண்டும், உதயநிதி பிரச்சார வாகனத்தில் தொங்கிக்கொண்டும்தான் இருக்கின்றனர். ஆனால், ஸ்டாலினின் மகன் என்ற ஒரே காரணத்தால், அரசியலுக்கு வந்து வெறும் ஐந்தே ஆண்டுகளில் அமைச்சராக உருவெடுத்திருக்கிறார் உதயநிதி.. குறுகிய காலத்தில் பெரும் பதவி வந்தால் அதை எப்படி தக்கவைப்பது? எப்படி திறமையாக பணியாற்றுவது என்றெல்லாம் நினைக்காமல், சீனியர்களை ஓரங்கட்டுவது, கட்சியை கைப்பற்றுவது, முக்கியமானவர்களை முட்டுச்சந்தில் நிற்கவைப்பது என்று திமுகவை அதகளப்படுத்தி, குதறிக்கொண்டிருக்கிறார் உதயநிதி.. உட்கட்சிக்குள்தான் இத்தனை பிரச்சனைகள் என்றால், கஷ்டப்பட்டு காங்கிரஸ் கட்சி கட்டியெழுப்பிய கூட்டணியையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது உதயநிதியின் பேச்சு..

பேச்சா பேசுன பேச்சு … இப்போ பேசிப்பாரு என்று வடிவேலு காமெடி போல, திமுகவின் சீனியர்கள் தற்போது உதயநிதி மீது கோபக்கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.. இதன் வெளிப்பாடுதான் கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலூரில் நடந்த திமுக முப்பெரும் விழாவிலும் எதிரொலித்தது. மேடையிலேயே வைத்து, உதய் க்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார் கட்சியின் சீனியர் டி.ஆர்.பாலு. “கொஞ்சம் அடக்கிவாசிக்கணும் தம்பி, இல்லன்னா கையில கெடச்சிருக்கும் பொருள் சுக்குநூறாக உடைஞ்சுரும் பா” என்று வெளிப்படையாகவே, எச்சரித்திருக்கிறார்.. இதைப்பார்த்துக்கொண்டிருந்த கட்சியினர் முகத்தில் எல்லாம் ஒரே ஷாக்தான்..

10 ஆண்டுகால வனவாசம் முடிந்து இப்போதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்… இப்போது வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் இப்படி வம்பிழுப்பதினால் ஒட்டுமொத்த கட்சிக்குமே பேராபத்து என்பதை எப்போதுதான் உணரப்போகிறாரோ சின்னப்பையன்.. சாரி சாரி சின்னவர் என்று முனுமுனுத்தவர்கள்தான் ஏராளம்..

ஆக, ஏற்கனவே கடுங்கோபத்தில் இருக்கும் திமுகவின் சீனியர்களை மேலும் மேலும் எரிச்சலூட்டுகிறதா உதயநிதியின் நடவடிக்கைகள்? ஆர்வக்கோளாறாக தன் ஆருயிர் தோழர் அன்பில் உடன் சேர்ந்துகொண்டு அவர் செய்யும் அட்டூழியங்களால் திமுக மாவட்ட செயலாளர்களே மனம்நொறுங்கிபோய் இருக்கிறார்களா? பொதுக்கூட்ட மேடையிலேயே சீனியர்கள் அட்வைஸ் கொடுக்கும் அளவிற்கு, ஆட்டம்போடும் உதயநிதியின் பக்குவமற்ற பேச்சால் திமுக சில்லுசில்லாக உடையக்போகிறது… இந்த உண்மை தெரிந்ததால்தான் உதயநிதி மீது செம்ம கடுப்பில் இருக்கிறார்கள் திமுகவின் சீனியர்கள் என்று உண்மையைப்போட்டு உடைக்கிறார்கள் உடன்பிறப்புக்கள்

–  இணையாசிரியர் மனோஜ்குமார் கோபாலன்

Exit mobile version