கடந்த சில நாட்களாக சாதுவாக சுற்றித் திரிந்த சின்னதம்பி யானை தென்னந்தோப்புக்குள் புகுந்து தென்னை மரங்களை வேரோடு பிடுங்கியுள்ளதால், அதனுடைய போக்கு சற்று மாறுபட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள கண்ணாடி புதூர் பகுதியில் 5 நாட்களாக சுற்றித் திரியும் சின்னத்தம்பி யானை, அங்கு இருந்த தென்னந்தோப்புக்குள் சென்று 12 தென்னை மரங்களை வேரோடு சாய்த்து உள்ளது. இதனால் தங்களுக்கு 12 லட்சம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சேதத்திற்கு இழப்பீடு தருவதோடு யானையை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.