பத்திரப் பதிவு ஆவண நிலையை அறிய புதிய வசதி !

பத்திரப் பதிவு ஆவண நிலையை அறிய இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பத்திரப் பதிவுத் துறைத் தலைவர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்திரப் பதிவுக்கு ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் பயன்படுத்தப்படுவதாகவும், ஆவணமானது பதிவுக்குத் தாக்கல் செய்யப்பட்டது முதல், பதிவு செய்த அசல் ஆவணம் திரும்பப் பெறும் வரை ஆவணத்தின் மீது எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளை அறிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அலுவலகத்துக்கு நேரில் வந்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ மட்டுமே தெரிந்து கொள்ளும் நிலை உள்ளதாகவும் , இந்த நிலையை மாற்றும் விதமாக, பதிவுத் துறையின் www.tnreginet.gov.in என்ற இணையதளத்தில் ஆவணத்தின் நிலை என்ற பிரிவை தேர்வு செய்து தற்காலிக ஆவண எண் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின் முழுமையான எண்ணை குறிப்பிட்டு , ஆவணத்தின் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் அறிந்து கொள்ள முடியும். இந்த வசதி கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி முதல் உருவாக்கப்பட்ட ஆவணங்களுக்குப் பொருந்தும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version