திருச்சி, காந்திநகர் பகுதியை சேர்ந்த உமா என்பவர், கள்ளக்காதலனால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டதையடுத்து, காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி ஏர்போர்ட் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி உமா சத்யா. இவர் அப்பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், உமா சத்யாவிற்கு அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சண்முகம் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது மாரிமுத்துவிற்கு தெரிய வர, மனைவியை கண்டித்துள்ளார். இதனை தொடர்ந்து, சண்முகத்துடனான பழக்கத்தை, உமா தவிர்த்துள்ளர். இதனால் ஆத்திரமடைந்த சண்முகம், குடிபோதையில் உமாவை, கத்தியால், கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடி உள்ளார். இதில் உமா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சண்முகத்தை கைது செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகினறனர்.