மகாராஷ்டிராவில், அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மீதான தாக்குதலைக் கண்டித்து இன்று முழுஅடைப்பு போராட்டம்

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து, மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் தானே அருகே உள்ள அம்பர்நாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கலந்து கொண்டார். அப்போது அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட தொழிலாளர் ஒருவர், திடீரென அமைச்சர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதையடுத்து அமைச்சரின் ஆதரவாளர்கள் அந்த நபரை அடித்து உதைத்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவரது பெயர் பிரவின் கோசவி என்பதும், திட்டமிட்டே அமைச்சரை தாக்கியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரவின் கோசவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ள காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து, குடியரசுக் கட்சி சார்பில் மகாராஷ்டிராவில் இன்று முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version