டி.எச்.எப்.எல் நிறுவனம் மீது மோசடிப் புகார்

டி.எச்.எப்.எல் நிறுவனத்தில் செலுத்திய முதலீடு செய்த பணத்தை மீட்டுத்தருமாறு பாதிக்கப்பட்டவர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் டி.எச்.எப்.எல் எனப்படும், தீவான் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் கடந்த 32 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. ஓய்வு பெற்ற முதியோர் தங்களது ஓய்வூதியப் பணத்தை இந்த நிறுவனத்தில் செலுத்தி, அந்த பணத்தை வட்டியுடன் சேர்த்து ஆண்டு இறுதியில் பெற்று வந்துள்ளனர். இதனை நம்பிச் சென்னையில் ஓய்வுபெற்றவர்கள் பலர் தங்களது ஓய்வூதியப் பணத்தை செலுத்தியுள்ளனர். இந்த நிலையில் டி.எச்.எப்.எல் நிறுவனம் போலியாக பல நிறுவனங்களை வைத்து பல ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து பணத்தைப் செலுத்திய சிலர் அக்டோபர் மாதம் அந்த நிறுவனத்திற்குச் சென்று கேட்டபோது, 3 மாதங்களில் பணத்தை திருப்பித் தந்துவிடுவதாக கூறியுள்ளனர். உறுதியளித்தபடி பணத்தை வழங்காத நிலையில், டி.எப்.எச்.எல் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பணத்தை மீட்டுத் தரக்கோரியும் பாதிக்கப்பட்டவர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

Exit mobile version