டெலிகாம் எக்ஸ்சேஞ்ச் நடத்தி மோசடி !

கொண்டலாம்பட்டி பகுதியில் புஷ்பவல்லி என்பவருக்கு சொந்தமான வீட்டின் இரண்டாவது மாடியில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு குடியிருந்த நபர், பிஎஸ்என்எல் டெலிகாம் எக்சேஞ்ச் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து அழைக்கப்படும் அழைப்பை, உள்நாட்டு அழைப்பாக மாற்றி மோசடியில் ஈடுபட்டு வந்ததையடுத்து, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு பெருமளவு நஷ்டம் ஏற்படுத்தி வந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து வீட்டில் சோதனையிட்ட போலீசார் தொழில்நுட்பக் கருவிகளை கைப்பற்றினர். இதேபோல் மெய்யனூர் அருகேயும் கருவிகளை கைப்பற்றிய போலீசார் மோசடியில் ஈடுபட்ட இருவரை கைது செய்தனர்.

Exit mobile version