தங்கைக்காக நண்பனை கொலை செய்த அண்ணன்

ஈரோட்டில், தங்கையை திருமணம் செய்ய வற்புறுத்திய நண்பனை கொலை செய்த அண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் மற்றும் கொளத்தூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். கொளத்தூர் விக்னேஷ், தனது நண்பனான விக்னேஷின் தங்கையை ஒருதலையாக காதலித்து வந்ததால், அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். நண்பனின் தங்கையிடம் தன்னை திருமணம் செய்ய கொளத்தூர் விக்னேஷ், வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் நண்பர்கள் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கொளத்தூர் விக்னேஷ், வெப்படை-குமாரபாளையம், சாலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் அவரது நண்பன் விக்னேஷை கைது செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டதில், தங்கையை திருமணத்திற்கு வற்புறுத்தியதால் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அண்ணன் விக்னேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Exit mobile version