ஓசூர் அருகே இரயிலில் வழித்தெரியாமல் மாறி வந்த வடமாநில இளைஞர் ஒருவரை, ஓராண்டிற்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையினரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் இரயில்நிலையத்தில் கடந்த வருடம் ஜூன் மாதத்தில் ரயிலில் வழித்தெரியாமல் தவறி வந்த, மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுபம் என்னும் இளைஞர் மீட்டெடுக்கப்பட்டார். பின், அவரை தனியார் காப்பகத்தில் ஒப்படைத்து பராமரித்த நகர காவல்துறையினர், சுபம் என்னும் இளைஞரின் தந்தை நாகு சாகுவை தொடர்பு கொள்ள தீவிர முயற்சி எடுத்தனர். அதன்பயனாக, மகாராஷ்டிரா மாநிலம், பிம்பிரி கிராமத்திலிருந்து நாகசாகு தனது மகனை மீட்க, ஓசூர் வந்தார். முன்னாள் ராணுவர் வீரரான நாகசாகு, ஓசூர் காவல்துறையினரிடம் பேசி, தனது மகனை 1 வருடத்துக்குப்பின் மீட்டார். இச்சம்பவம் காண்போர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.