சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 8 அன்று திறந்து வைக்கவுள்ளார்.
1,36,295 சதுர மீட்டரில் ரூ.1260 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள டி-2 (முதல் கட்டம்) இந்தப் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடம் மூலம் விமான நிலையத்தில் ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகளை கையாளுதல் என்ற எண்ணிக்கையில் இருந்து 30 மில்லியன் பயணிகளை கையாளுதல் என்ற எண்ணிக்கையாக அதிகரிக்கும்.
உள்ளூர் தமிழ் கலாச்சாரம், கோலம் போன்ற பாரம்பரிய நடைமுறைகளை உள்ளடக்கியது (தென்னிந்திய வீடுகளில் வாசலில் வரையப்படும் வடிவம்), சேலை, கோயில்கள் மற்றும் இதர இயற்கை சூழல்களை எடுத்துக்காட்டும் வகையில் புதிய முனையம் பிரதிபலிக்கிறது.
Discussion about this post