ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பாக வெற்றி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு அவர்கள் களமிறங்கியுள்ளார். அவரை ஆதரித்து கழகத்தின் இடைக்காலப் பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். ஏற்கனவே கடந்த வாரம் மூன்று நாட்கள் ஈரோடு கிழக்கில் சூறாவளிப் பிரச்சாரத்தினை மேற்கொண்டிருந்த அவர், தற்போது மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
பிரச்சாரத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் அவர்கள், கழகத்தின் வெற்றி வேட்பாளர் கே.எஸ். தென்னரசுக்கு வெற்றிச் சின்னமான இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார். மேலும் அதிமுக ஆட்சிகாலத்தில் மக்களுக்கு செய்த நலத்திட்டங்களை எடுத்துக்கூறி மக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த விடியாத திமுக ஆட்சியில் தொடர்ந்து மக்கள் அவதிபட்டு வருகிறார்கள். முக்கியமாக ஈரோடு கிழக்கில் வாக்காளர்களை அடைத்துவைத்து புதிய பார்முலாக்களை கையாளும் இந்த விடியாத அரசினரின் போக்கை மாற்றி அமைக்க வேண்டும் என்று மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
Discussion about this post