நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் பேசிய மாற்றுத்திறன் பயிற்றுநர்கள் சங்கம் தலைவர் சேதுராமன், தமிழகம் முழுவதும் ஆயிரத்து 660 சிறப்பு பயிற்றுநர்கள் அரசு பள்ளிகளில் பணியாற்றி வருவதாகவும், 10 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் பணி உறுதிசெய்யப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் 20 ஆண்டுகளாக பணியாற்றியும் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார். மேலும் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தார்.
Discussion about this post