தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர் பணிக்கு திமுகவினர் சுமார் 15 லட்ச ரூபாய் வரை பெற்றுக்கொண்டு தங்களுக்கு வேண்டப்பட்ட ஆட்களை முறைகேடாக பணி நியமனம் செய்யும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒலக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் கிராம உதவியாளர் பணிக்கு திமுக அமைச்சர் மஸ்தான் சுமார் 12 லட்சம் வரை பெற்றுக்கொண்டு பணி வழங்குவதாக கூறப்படுகிறது. அதன் ஒருபகுதியாக ஒலக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்னம்பூண்டி கிராமத்தில் கிராம உதவியாளர் பணிக்கு திண்டிவனம் நகராட்சியை சேர்ந்த ஒருவரை முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது தொடர்பாக திமுகவை சேர்ந்த முருகவேல் என்பவர் அமைச்சர் மஸ்தானின் உதவியாளரிடம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Discussion about this post