தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பெய்த திடீர் கனமழையால், கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 1 லட்சம் நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளன.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சீனிவாசநல்லூர், கோத்தங்குடி, தண்டாதோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் சேமிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக பெய்த கனமழையால், நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, சீனிவாசநல்லூர் மற்றும் சன்னாபுரத்தில், திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.
இதனால் விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டுவைத்துள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Discussion about this post