தமிழக அரசு நிர்வாகத் திறன் இன்மையால் கொரோனாவால் ஏற்படும் இறப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. படுக்கை வசதி, ஆக்ஸிஜன், தடுப்பூசி என அனைத்திற்கும் பெரும் தடுப்பாடு நிலவும் சூழலில் தமிழக மக்கள் பேரிடரில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோன பாதித்த பெண் ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்டுள்ளார். ஆனால் படுக்கை வசதி இல்லை என கூறி அவரை அனுமதிக்க மறுத்த மருத்துவமனை நிர்வாகம், அவர்களை மருத்துவமனை வாசலிலேயே காத்திருக்க வைத்துள்ளனர். நேரம் செல்ல செல்ல நிலைமை கவலைக்கிடமாவதை உணர்ந்த கொரோனா பாதித்த பெண்ணின் தாய், மகளின் உயிரைக் காப்பாற்றுமாறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் மன்றாடி உள்ளார்.
8 மணி நேரம் சிகிச்சைக்கு காத்திருந்த பெண், நிலைமை மோசமாகி சுய நினைவிலிருந்து மயக்க நிலைக்கு சென்றுள்ளார். மனதில் ஏதோ ஒரு மூலையில் சிறு நம்பிக்கையுடன் மகளின் அருகிலேயே அமர்ந்திருந்த தாய்க்கு அவர் கண் முன் விரிந்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு வந்த மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்ஸில் இருந்து இறக்கி நோயாளியை அனுமதித்தனர். ஆனால் கிட்டத்தட்ட தன் இறுதி கட்டத்தில் இருந்த அந்த பெண் படுக்கை சேர்ந்த சில நிமிடங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Discussion about this post