குஜராத் தொழில் அதிபர் நீரவ் மோடியைத் தொடர்ந்து அதே மாநிலத்தைச் சேர்ந்த மருந்து நிறுவன அதிபர் நிதின் சந்தேசரா ஆந்திர வங்கியில் 5 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த மோசடி தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கப் பிரிவு, ஆந்திர வங்கியின் முன்னாள் இயக்குனர் அனுப் கார்க், மருந்து நிறுவன இயக்குனர்கள், ஆடிட்டர் உள்ளிட்ட சிலரை கைது செய்தனர்.
தொழில் அதிபர் நிதின் சந்தேசராவுக்கு சொந்தமான மருந்து நிறுவனத்தின் 4 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் அமலாக்க பிரிவினர் முடக்கி உள்ளனர்.
வெளிநாடு தப்பிச் சென்ற நிதின் சந்தேசராவை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, துபாயில் இருந்து தப்பிச் சென்ற அவர், நைஜீரியாவில் தஞ்சம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
Discussion about this post