நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் 105 வது பிரிவின் கீழ் சென்னை – சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், 2013 ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் 105 வது பிரிவு செல்லும் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது. கருத்து கேட்புக்கு விலக்கு அளிக்கும் சட்டப்பிரிவு 105, அரசியல் சட்டத்துக்கு எதிரானது அல்ல என்பதும் நீதிமன்றத்தின் கருத்து. எனவே நிலம் கையகப்படுத்த கருத்து கேட்கத் தேவையில்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Discussion about this post