சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா காவல் ஆணையரிடம் நாளை முதல் சிபிஐ விசாரணை நடத்த உள்ளது.
கொல்கத்தா காவல் துறையினரால் கடந்த வாரம் சிறைப்பிடிக்கப்பட்ட சிபிஐ அதிகாரிகள் டெல்லி திரும்பினர். உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் நாளை முதல் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
நிதிநிறுவன மோசடி தொடர்பாக, சுமார் நூறு கேள்விகளை அவரிடம் கேட்க சிபிஐ திட்டமிட்டிருக்கிறது. மக்களவை தேர்தல் நெருங்க உள்ளதால், காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டிய கட்டாயம் சிபிஐக்கு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
Discussion about this post