எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் மருத்துவமனையில் இருந்து திரும்பிய பிறகு கணவன் – மனைவி இருவருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கர்ப்பிணியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தனது சொந்த பணத்தில் இருந்து 2 லட்ச ரூபாய் நிதி உதவியையும் அவர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கேட்டுக்கொண்டபடி இலவச வீட்டுமனையும் இலவச வீடும் கட்டித் தரப்படும் என்றார்.
Discussion about this post