ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கடல்பகுதியில் அதிகளவில் கரை ஒதுங்கும் கடல்புற்களை, கால்நடைகளுக்காக விவசாயிகள் எடுத்து செல்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்த மாரியூர் மற்றும் முந்தல் கடல் பகுதிகளில், கடந்த சில தினங்களாக பலத்த காற்று வீசுவதால் கடல்சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் இந்த பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகளவில் கடல்புற்கள் கரை ஒதுங்குகின்றன.
பவளப்பாறைகள் அதிகம் உள்ள இந்த பகுதிகளில் இருந்து அதிக அளவில் ஒதுங்கும் கடல்புற்களை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு உணவாக, விவசாயிகள் எடுத்துச் செல்கின்றனர்.
Discussion about this post