இன்னொரு '96,ஆனால் ஜானு த்ரிஷா இல்லை!

’காதலே காதலே தனிப்பெரும் துணையே’ என்று அனைவரையும் அதிகளவில் முணுமுணுக்க  வைத்த பாடல் இடம்பெற்றுள்ள படம் தான் ’96.இப்படமானது பிரேம் குமார் இயக்கத்தில் த்ரிஷா,விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம், மிகவும் எளிமையான முறையில் எடுக்கப்பட்டிருந்தாலும்,அனைவரையும் பள்ளி பருவத்திற்கு மீண்டும் அழைத்து சென்றது போல் உணரவைத்தது..

இன்னும் அதிகளவில் 96ன் காட்சிகள் watsapp status-ல் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில்,இன்னொரு ‘96 வர இருக்கிறது.ஆமாம் ’96 படத்தை பிரேம்குமாரே தெலுங்கில் ரீமேக் செய்கிறார் .ஆனால் இதில் ஜானு,த்ரிஷா இல்லை.ஜானுவாக சமந்தாவும்,ராமாக சர்வானந்தும் நடிக்க உள்ளனர்.மேலும் இப்படமானது 1996 ல் நடக்கும் கதையாக இல்லாமல் 2009 ல் நடப்பது போலும், கல்லூரி காலங்களில் இருவருக்கும் உள்ள காதலை மையமாக வைத்து கதை அமைந்திருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கும் எனவும், ஆகஸ்ட்-ல் படம் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.பிரேம் குமாரே இப்படத்தை இயக்குவதால் நிச்சயமாக ரசிகர்களுக்கு புதுமையான கதைக்களம் அமைந்த இன்னொரு 96 ன் அனுபவம் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

96 படத்தில் பள்ளி பருவத்தின் காதலை அழகாகவும், சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரியும் அவர்களின் வழியை உணர்ச்சிப்பூர்வமாகவும் உருவாக்கிருப்பார்.தற்போது ரீமேக் ‘96 திரைப்படத்தில் கல்லூரி கதை என்பதால் வழக்கமான காதல் கதையில் வருவது போல் இல்லாமல் சற்று புதுமையாகவே இருக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.

Exit mobile version