விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹர்பஜன் சிங்!!

விஜய் சேதுபதியின் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ரீமேக்கில், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, பாலாஜி தரணிதரன் இயக்கிய இந்தப் படம், த்ரில்லருடன் கூடிய நகைச்சுவை பின்னணியில் உருவாகியிருந்தது. ஏற்கனவே இந்தப் படம் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உட்பட 6 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது பஞ்சாபி மொழியிலும் மறு உருவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும், அதில் ஹர்பஜன் சிங் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழில் ‘பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் ஹர்பஜன் சிங் நாயகனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version