ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே பனிமூட்டதால் லாரியின் பின்னால் அடுத்தடுத்து 9 வாகனங்கள் மோதிய விபத்தில், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வாலாஜாபேட்டை அடுத்த கடப்பந்தாங்கள் சுங்கச்சாவடி அருகே ஈச்சர் லாரி ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. பனிமூட்டம் அதிகம் காணப்பட்டதால், முன்னால் சென்ற லாரி தெரியாமல் பின்னால் வந்த 2 லாரி மற்றும் 5 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டோரை மீட்ட மற்ற வாகன ஓட்டிகள் அவர்களை வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடும் பனிப்பொழிவு காரணமாக இந்த விபத்து நடைபெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு தமிழகம் முழுவதும் அதிகளவு பனிப்பொழிவு இருப்பதால், சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப் படியே செல்கின்றன.
மேலும் அவ்வழியாக வாணியம்பாடி நோக்கி வந்துகொண்டிருந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் “நீலோபர் கபீல்” காயமடைந்தவர்களை மீட்டு 4 ஆம்புலன்ஸ் வாகனங்களை வரவழைத்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்..மேலும் பங்களாதேஷ் சேர்ந்த இருவர் லேசான காயம் அடைந்தனர். அவர்களை வாகனம் மூலம் விமான நிலையத்துக்கு அனுப்பிவைத்தா