சென்னை விமான நிலையத்தில் ரூ.7 லட்சம் தங்கம் கடத்தல்

துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

துபாயிலிருந்து சென்னை வந்த செய்யது இஸ்மாயில் என்பவரின் உடமைகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 217 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மேலும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவந்த 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கேமிராக்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Exit mobile version