சீனாவின் ஷாங்காயில் புதிதாக கட்டப்பட்டு வந்த வணிக வளாகத்தின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஷாங்காயின் சாங்க்னிங் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுவந்த வணிக வளாகத்தின் மேற்கூரை நேற்று திடீரென சரிந்து விழுந்தது. இதில் கட்டிடத்தில் வேலை செய்துவந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
இதனிடையே, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் கட்டிட இடிபாடுகளில் இருந்து 21 தொழிலாளர்களை காயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 7 பணியாளர்களின் சடலங்களை மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக சிலரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வளர்ந்த நாடுகளின் பட்டியலில் உள்ள சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக கட்டிட இடிபாடுகள் ஏற்படுவது தொடர் கதையாகியுள்ளது. கடந்த 2016ல் வென்சூ பகுதியில் ஏற்பட்ட கட்டிட இடிபாட்டில் 20 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.