மதுரையில் முழுஊரடங்கு மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு – முதல்வர் அறிவிப்பு!

மதுரையில் தற்போது அமலில் இருக்கும் முழு ஊரடங்கை, 6ம் தேதி முதல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டத்தில் கடந்த 24ம் தேதி முதல் நாளை நள்ளிரவு 12 மணிவரை முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது என தெரிவித்துள்ளார். நோய்த்தொற்று குறைந்திருப்பினும், முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக மேலும் 7 நாட்களுக்கு, அதாவது ஜூலை 6 முதல் 12ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை முழு ஊரடங்கை நீட்டிக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார். அரசு, ஊரடங்கை அமல்படுத்தினாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால் இந்த நோய் பரவலை தடுக்க இயலாது என அவர் தெரிவித்துள்ளார். முகக்கவசம் அணிதல், அடிக்கடி சோப்பால் கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்டவற்றை தவறாமல் கடைபிடித்து, பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version