மேற்கு வங்கத்தில் இன்று 6-ம் கட்ட வாக்குப்பதிவு!

மேற்கு வங்கத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று 6-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

8 கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து வரும் மேற்கு வங்கத்தில் 5 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்தநிலையில், இன்று 6-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வடக்கு 24 பர்கானாக்கள், நாடியா, கிழக்கு பர்தமான், உத்தர் தினாஜ்பூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 43 தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக 14 ஆயிரத்து 480 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்றைய தேர்தலில் 1 கோடியே 3 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் களத்தில் 306 வேட்பாளர்கள் உள்ளனர். மாநில போலீசாருடன் இணைந்து ஆயிரத்து 071 கம்பெனி துணை ராணுவமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Exit mobile version