இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை சுமார் 60 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாக, மத்திய நேரடி விற்பனை வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, மத்திய நேரடி விற்பனை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் பெறும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை, கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 60 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-15 ம் ஆண்டில், 88 ஆயிரத்து 649 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள், தங்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் உள்ளதாக கணக்கு காண்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2017-18ம் ஆண்டில், ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 139 ஆக அதிகரித்துள்ளதாகவும், மத்திய நேரடி விற்பனை வாரியம் தெரிவித்துள்ளது.