போடி அருகே சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளிய 6 மாட்டு வண்டிகளை வட்டாட்சியர் பறிமுதல் செய்தார்.
தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கொட்டக்குடி மற்றும் கூலிங் ஆற்றுப் பகுதிகளில் மணல் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. இந்நிலையில், கூலிங் ஆற்றில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளுவதாக வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுயத்து தீவிர சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்த 6 மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும், மணல் கடத்தலில் ஈடுபட்ட மாட்டுவண்டி உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.