விழுப்புரத்தில், சடலமாக மீட்கப்பட்ட 5 வயது சிறுவன் பட்டினியால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், சிறுவனை 2 பேர் தள்ளுவண்டியில் போட்டுச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளதால், காவல்துறை உண்மையை மறைக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த 15ம் தேதி, விழுப்புரம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், 5 வயது சிறுவன் தள்ளு வண்டியில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டான்.
இதையடுத்து, போலீசார் சடலத்தை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறாய்வு ஆய்வில், சிறுவன் பட்டினியால் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி நள்ளிரவு, வடமாநிலத்தவர்கள் இரண்டு பேர், சிறுவனை விராட்டிக்குப்பம் சாலையில் உள்ள கோயிலுக்கு உயிருடன் கொண்டு செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.
பின்பு விழுப்புரம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பிணமாக கொண்டு சென்று வண்டியில் போட்டுச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. இதனால், இச்சம்பவத்தில், காவல்துறையினர் உண்மையை மறைப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
Discussion about this post