இடுக்கி அணை பகுதியில் 5-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய அணையான இடுக்கி அணை, முல்லைப் பெரியாறு அணையை விட 7 மடங்கு பெரியது. 170 மீட்டர் உயரம் கொண்ட இந்த அணைப் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
திங்கட்கிழமை அடுத்தடுத்து இரண்டு முறையும், செவ்வாய் கிழமை அதிகாலையிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் இடுக்கி அணையை சுற்றி உள்ள பகுதிகளில் 20க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு நிலநடுக்கத்தின் பாதிப்பு உள்ளதாகவும் புவியியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு இடுக்கி அணைப் பகுதியில் 5-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.