நெல்லை மாவட்டத்தில், தொடர் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் 5 வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது…
தொடர் கனமழையால், மாவட்டத்தில் உள்ள பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்பி, உபரி நீர் அதிக அளவு வெளியேற்றப்பட்டு வருகிறது. இரண்டு அணைகளிலும் வினாடிக்கு 13 ஆயிரத்து 500 கனஅடி வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதேபோன்று தென்காசி மாவட்டம் கடையத்தில் உள்ள கடனாநதி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்த நிலையில், அங்கிருந்து 3 ஆயிரம் கனஅடி நீர் வரை தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர், காற்றாற்று வெள்ளம் என, 20 ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் செல்வதால், 5-வது நாளாக வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.
இதையடுத்து ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post