16 மாநிலங்களில் 34 நதிகளை தூய்மைப்படுத்த ரூ.5,870 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர்

நாடு முழுவதும், 16 மாநிலங்களில், 34 நதிகளை தூய்மைபடுத்த, 5 ஆயிரத்து 870 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், பபுல் சுப்ரியோ எழுத்து பூர்வமாக அளித்த பதிலில், நாடு முழுவதும் உள்ள நதிகளை தூய்மைபடுத்துவதற்காக, தேசிய நதி பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்பட்டு, 5 ஆயிரத்து 870 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். அதில், மத்திய அரசு, தன் பங்காக, மாநிலங்களுக்கு, 2 ஆயிரத்து 522 கோடி ரூபாய் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தேசிய நதி பாதுகாப்பு திட்டத்தின் கீழ், நதிகளை தூய்மைபடுத்துவது குறித்து, மாநில அரசுகளிடம் இருந்து கோரிக்கைகள் வரும் பட்சத்தில், அது குறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டுவாரியம், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம், சோதனை நடத்தி, நீரின் தரம் குறித்து ஆராயப்படும் என பபுல் சுப்ரியோ தெரிவித்தார்.

Exit mobile version