இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் புதிய நிறுவனங்களை அமைக்க இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, கோபே நகரில் ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சுவாமி விவேகானந்தர், குருதேவ் ரபிந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்டோர் ஜப்பானுடனான இந்திய உறவை மேம்படுத்த பங்களித்திருப்பதாக கூறினார்.
பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜப்பானுடனான உறவுக்கு இந்தியா முக்கியத்துவம் அளிப்பதாக கூறிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த உறவு இன்று அல்ல நூற்றாண்டுகளை கடந்தது என தெரிவித்தார்.
ஆரம்பத்தில் கார்களை தயாரிக்க இந்தியா பங்களித்ததாகவும், தற்போது புல்லட் ரயில்களை தயாரிக்க பங்களிக்கப்பதாகவும் கூறினார். மக்களவை தேர்தலில் கிடைத்த வெற்றி ஜனநாயகத்தின் வெற்றி என்று அவர் தெரிவித்தார்.