நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வை நாடு முழுவதும் 14 லட்சத்து 10 ஆயிரத்து 754 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். தமிழகத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுதினர். இந்நிலையில் நீட் தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
நீட் தேர்வு முடிவுகளை www.nta.ac.in மற்றும் www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு அறிந்து கொள்ளலாம். தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக டெல்லியில் 74.92 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் கடந்தாண்டு நடந்த தேர்வில் 39.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 9.01 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள் பிரிவில், தேசிய அளவில் தமிழக மாணவர் கார்வண்ணபிரபு 5-ம் இடம் பிடித்துள்ளார்.