இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, சவுதம்டனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 246 ரன்களில் சுருண்டது. இதனைத்தொடர்ந்து விளையாடி இந்தியா அணி, முதல் இன்னிங்சில் 273 ரன்கள் சேர்த்தது. புஜாரா சிறப்பாக விளையாடி, 132 ரன்கள் குவித்தார். இதையடுத்து 27 ரன்கள் பின்தங்கியநிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, 2வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன் சேர்த்தது. 3வது நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், இங்கிலாந்து அணி தடுமாறியது. பின்னர், நிதானமாக விளையாடி கேப்டன் ஜோ ரூட் 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி, ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெற உள்ள நிலையில், இங்கிலாந்து அணி 233 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
4 -வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முன்னிலை
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, உலகம், செய்திகள், விளையாட்டு
- Tags: 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிஇங்கிலாந்துஇந்தியா
Related Content
யூரோ கோப்பையை தட்டித்தூக்கிய இத்தாலி - இங்கிலாந்தின் கனவை தகர்த்தது
By
Web Team
July 12, 2021
தரவரிசையில் முதலிடம் பிடித்தார் இந்திய கேப்டன் மித்தாலி ராஜ்
By
Web Team
July 6, 2021
ட்விட்டர் மீது வழக்குப்பதிவு - காரணம் என்ன?
By
Web Team
June 29, 2021
இந்தியா கொரோனா பாதிப்பு நிலவரம்
By
Web Team
June 4, 2021
இந்தியாவில் குறைந்தது கொரோனா பாதிப்பு
By
Web Team
May 25, 2021