மேற்குவங்கம், அசாமில் நாளை 3ம் கட்ட தேர்தல்!

மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் நாளை மூன்றாம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

மேற்கு வங்கத்தில் நாளை நடைபெறும் மூன்றாம் கட்ட தேர்தலில் 31 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஹவுரா, ஹூக்லி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் நடைபெறும் இந்தத் தேர்தலில் 78 லட்சத்து 52 ஆயிரத்து 425 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 205 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 10 ஆயிரத்து 871 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 293 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்திற்கு, 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முதல் 2 கட்ட வாக்குப்பதிவில் 60 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றுள்ளது.

அசாம் மாநிலத்தில் ஏற்கனவே இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் 86 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், மீதமுள்ள 40 தொகுதிகளுக்கான மூன்றாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு வருகிற நாளை நடைபெறவுள்ளது. 3ம் கட்ட தேர்தலில் மொத்தம் 337 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

 

அதேபோல கேரளாவில் உள்ள 140 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 2 கோடியே 74 லட்சத்து 46 ஆயிரத்து 39 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ஆளும் இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி என மும்முனை போட்டி நிலவுகிறது.

 

Exit mobile version