திருச்சி அருகே நிலத்தகராறு காரணமாக குழந்தையின் முடியை பிடித்து இழுத்து தாக்கிய திமுக முன்னாள் நகர செயலாளர் மற்றும் டிடிவி.தினகரன் ஆதரவாளரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
முசிறியை சேர்ந்த அழகு மணி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முன்னாள் திமுக நகர செயலாளர் ரவிச்சந்திரனுக்கும் நிலத்தகராறு இருந்து வருகிறது. இந்தநிலையில் தனது 3 வயது குழந்தையை ரவிச்சந்திரன், டிடிவி தினகரனின் ஆதரவாளர் நந்தினி சரவணன் உள்ளிட்டோர் துணிகளை கிழித்து தலைமுடியை இழுத்து அடித்து உதைத்ததாக அழகுமணி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ரவிச்சந்திரன் மற்றும் நந்தினி சரவணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.