3 கோடியே 97 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 3 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகளை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

அதன் படி விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை அமைச்சர் தொடங்கி வைத்தார். அதேபோன்று ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிதி ஒதுக்கீட்டில் குடிநீர், சாலை, மின்விளக்கு மற்றும் வடிகால் வசதி காண அடிப்படை வசதி பணிகளையும் துவக்கி வைத்து பேசிய அவர், மக்களின் தேவைகளை, விவசாயிகளின் கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது, எனவும் வரட்சி ஏற்படதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Exit mobile version