69 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டுள்ள 275 பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.போக்குவரத்துத் துறை சார்பில் விழுப்புரத்திற்கு 72 பேருந்துகள், கும்பகோணத்திற்கு 68 பேருந்துகள், கோவைக்கு 75 பேருந்துகள், சேலத்திற்கு 43 பேருந்துகள் என 69 கோடி ரூபாயில் 275 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். புதியதாக தொடங்கப்பட்ட இந்த பேருந்துகளில் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. புதிய பேருந்துகளில் ஓட்டுநருக்கு மின்விசிறி, பயணிகள் இறங்கும் இடத்தை அறிவிக்கும் ஒலிபெருக்கி மற்றும் பயணிகள் எளிதாக ஏறி, இறங்கிட ஏதுவாக தானியங்கி கதவுகளுடன் கூடிய அகலமான தாழ்தள படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேருந்தின் இருபுறம் அவசர கால வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.