கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க 25% படுக்கைகள் ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் 25 சதவீத படுக்கைகளை ஒதுக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சுமார் 10 ஆயிரம் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் 25 சதவீத படுக்கைகளை ஒதுக்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இந்த படுக்கைகள் மற்ற வார்டுகளிலிருந்து  தனியாக இருக்க வேண்டும் எனவும் அதிநவீன வசதிகளுடன் வார்டுகள் அமைக்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மருத்துவமனைகளும் உடனடியாக இந்த உத்தரவை கடைபிடிக்க வேண்டுமெனவும் உத்தரவை கடைபிடிக்காத தனியார் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version